சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். அது தானாக நடக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலை, இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதனைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே நடக்கும். அதேபோல் கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாகப் பார்த்தலே போதுமானது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கவனமுடன் கையாள வேண்டும்.
இது மிகவும் முக்கியமான பணி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதால் இதில் தனி கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் விபரங்களை தலைமை கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}