அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்

Mar 25, 2026,07:01 PM IST

சென்னை : அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரங்களை அதிமுக பொதுச் செயலாளரும், கூட்டணியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதம் இருக்கும் இடங்களில் அதிமுக போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட உள்ளது. ஏற்கனவே இன்று காலை 23 பேர் கொண்ட முதல் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இன்று மாலை மயிலாப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.


அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம் :




பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் :


மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் தனி


பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் :


சேலம் மேற்கு, தர்மபுரி, பெண்ணாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ் வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர்.


அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் : 


பெரியகுளம், மன்னார்குடி, காரைக்குடி, திருவையாறு, திருப்பத்தூர், நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம்.


தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள் :


ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை


இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் : 


பல்லாவரம், குன்னம்


தமமுக போட்டியிடும் 1 தொகுதி :


ராஜபாளையம்


புரட்சி பாரதம் போட்டியிடும் 1 தொகுதி :


கேவி குப்பம் (தனி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இது தீராத தாகம்!

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை

news

உயிரெழுத்தில் உறவோசை!

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்