தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list

Mar 25, 2026,07:01 PM IST

-பாவை.பு


சென்னை:  தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீடு குறித்த தீவிர ஆலோசனைகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் குறித்த பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார்.


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23.04.2026 அன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


அந்த வகையில் பாஜகவின் தொகுதி பங்கீடு குறித்து அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்காகத் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் மற்றும் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 


இதில் பாஜக 27 இடங்களிலும், தினகரனின்  அமமுக கட்சிக்கு 11 இடங்கள், பாமக அன்புமணிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஒப்பந்தம் கையெழுத்தாகி அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் பாஜக தாங்கள் களம் காண விரும்பும் உத்தேச பட்டியலையும் அமை்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்திருந்தார்.




அதன் அடிப்படையில் தற்போது தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி விவரங்களை இன்று வெளியிட்டார்.


பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:


மயிலாப்பூர்

தளி

மொடக்குறிச்சி

உதகமண்டலம்

அவிநாசி

திருப்பூர் தெற்கு

கோவை வடக்கு

கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை

திருப்பத்தூர்

மதுரை தெற்கு

சாத்தூர்

திருச்செந்தூர்

வாசுதேவநல்லூர்

ராதாபுரம்

நாகர்கோவில்

விளவங்கோடு

ஆவடி

திருவண்ணாமலை

தஞ்சாவூர்

திருவாரூர்

அறந்தாங்கி

மானாமதுரை

ராமநாதபுரம்

குளச்சல்

பத்மநாபபுரம்

ராசிபுரம் தனி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

news

தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

news

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!

news

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!

news

எனக்கு ஏன் பெரியாரைப் பிடித்தது?

news

என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்