சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

Dec 01, 2025,12:36 PM IST

கோபிச்செட்டிபாளையம் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ. செங்கோட்டையனை "சுயநலவாதி" என்றும், தனக்கு "அடையாளத்தை கொடுத்த கட்சிக்கு எதிராக செயல்பட்ட துரோகி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். 


சிறிது கால இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மீண்டும் செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் இருந்து துவக்கி உள்ளார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பேசிய பழனிசாமி, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதற்கு விளக்கம் அளித்ததுடன், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக, கோபிசெட்டிபாளையம் தொகுதியை தக்கவைக்கும் என்றும் உறுதியளித்தார்.


செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் ஒருபோதும் வாக்காளர்களின் கருத்தை கேட்டதில்லை என்று பழனிசாமி குற்றம்சாட்டினார். அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாரம்பரிய வாழ்த்தை செங்கோட்டையனுக்கு தெரிவித்த பழனிசாமி, ஒருமுறை அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்ததை நினைவு கூர்ந்தார். அந்த நிகழ்ச்சியின் பின்னணியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லை என்று அவர் காரணம் கூறியதாகவும், ஆனால் விவசாயிகள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டதாகவும் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.




நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் முடிவை கேலி செய்த பழனிசாமி, இப்போது எந்த தலைவர்களின் படங்கள் அவரை ஊக்குவிக்கின்றன என்று கேட்டார். செங்கோட்டையன் முக்கிய அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததோடு, நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று காலக்கெடு விதித்த போதிலும், அவரது நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு சென்ற பின்னரே கட்சி அவரை நீக்கியது என்றும் பழனிசாமி தெரிவித்தார்.


முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி படங்கள் மட்டுமே இருந்த அரசு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டதாகவும், ஆனால் அதிமுக.,வின் அத்திக்கடவு அவினாசி திட்டம் முயற்சிகளைப் பாராட்டும் நிகழ்ச்சிகளை புறக்கணித்ததாகவும் பழனிசாமி மீண்டும் வலியுறுத்தினார். "2-3 ஆண்டுகளாக, அவர் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயல்பட்டார்" என்றும் கூறினார். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை "கடவுள் பார்த்துக் கொள்வார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


செங்கோட்டையனைப் போலல்லாமல், தான் ஒரு விசுவாசமான கட்சித் தொண்டனாக இருப்பேன் என்று பழனிசாமி உறுதிபடக் கூறினார். அதிமுக அனைத்து சவால்களையும் சமாளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்றும், கோபிச்செட்டிப்பாளையம் மாநிலத்தின் முதன்மையான தொகுதியாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களின் உற்சாகமான வருகை ஏற்கனவே "செங்கோட்டையனின் கனவுகளை நொறுக்கிவிட்டது" என்றும் அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

news

தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!

news

பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!

news

டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்

news

டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்