சென்னை: மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஆளும் கட்சியினர் முறையாக திட்டமிடாத காரணத்தினாலேயே இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் நம்பி வந்த மக்களுக்கு குந்தகம் விளைவித்தது ஸ்டாலின் அரசு எனவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுவது இதுவே முதல்முறை. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமாக கடற்கரையில் ஒன்று கூடினர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்டனர். இதனால் சாலைகளில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையம்,பேருந்து நிலையமே ஸ்தம்பித்தது. மேலும் நிகழ்ச்சி முடிந்தும் மூன்று மணி நேரம் ஆகியும் கூட்டம் நெரிசல் குறைய வில்லை.
இதில் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 240 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது, 92வது விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு விமானப்படையின் வீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வான்வழி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வான்வழி சாகச நிகழ்ச்சியில் மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பின் அடிப்படையில் லட்சக்கணக்கான மக்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் திரளாக கூடியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை கண்டு களித்திருந்த வேளையில் இந்த அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தினால் லட்சக்கணக்கான மக்கள் கூடிய மெரினா கடற்கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பிட வசதியின்றி மக்கள் துன்பத்திற்கு ஆளாகினர். இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் அறிவிப்பின் காரணமாகவே லட்சக்கணக்கான மக்கள் கூடும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காண எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் தெரிந்திருந்தால், இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. இவ்வளவு பேர் வருவார்கள் என்பதை அறிந்து திட்டமிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதும் அரசின் கடமை. ஆக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு விட்டு அந்த அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு துன்பம் தான் ஏற்பட்டுவிட்டது. விலைமதிக்க முடியாத உயிரை இழந்தது தான் மிச்சம். இது இந்த அரசின் செயலற்ற தன்மையை இது காட்டுகிறது. இது வெட்கக்கேடான விஷயம்.
இதே விமான சாகச நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அங்கெல்லாம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற காரணத்தினாலே, திட்டமிட்டு செயல்படாத காரணத்தினாலே மக்கள் இன்று துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பல பேர் இறந்து இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவல நிலையை பார்க்க முடிகிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இனியாவது திமுக தலைமையில் உள்ள ஸ்டாலின் அரசு உளவுத்துறையின் மூலம் சரியான தகவலை பெறப்பட்டு முன்கூட்டியே தக்க பாதுகாப்பும் தேவையான அடிப்படைகளை செய்து கொடுக்கவும் வலியுறுத்துகிறோம். எத்தனை பேர் வருவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவலை பெறப்பட்டு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வது அரசின் கடமை. அதை செய்ய தவறியது அரசு. இதற்கு முழு பொறுப்பும் ஸ்டாலின் தான் ஏற்கப்பட வேண்டும்.
ஏனெனில் இவர்தான் விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களியுங்கள் என அழைப்பு விடுத்தார். அப்படி அறிவிப்பை வெளியிட்டு விட்டு வருகின்ற மக்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறியதாலேயே பல பேர் உயிரிழந்தும் பலபேர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
அன்னையர் தினம்.. அன்னை இன்றி அமையாது உலகு!
பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத்.. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. முக்கிய கதாபாத்திரத்தில்!
சிவகார்த்திகேயன் அம்மாவின் 70வது பிறந்த நாளை எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க!
சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட.. 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவின் அதிரடியால் ஆட்டம் காணும் பாகிஸ்தான்.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
{{comments.comment}}