சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் நொடிக்கு நொடி பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதன் புதிய அப்டேட்டாக இன்று காலை அன்புமணி தரப்பு பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.
அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணிக்குள் வந்து விட்டதால் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பையும் அதிமுக கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக தலைமை இறங்கி உள்ளது. இதற்காக அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாசின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இருவரும் இரு வேறு அணிகளாக பிரிந்துள்ளதால் பாமக ஓட்டுக்கள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி சிதறும் வட தமிழக ஓட்டுக்கள் திமுக.,விற்கோ அல்லது தவெக.,விற்கோ சென்று விடக் கூடாது என்பதில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் உறுதியாக உள்ளன. பாமக.,வில் அன்புமணி, ராமதாஸ் இருவரில் ஒருவர் மட்டும் கூட்டணிக்கு வந்தால் பலனில்லை. இருவருமே வந்தால் தான் கூட்டணிக்கு பலம் கிடைக்கும். வட தமிழக ஓட்டுக்களை அப்படியே அள்ள முடியும் என்பதால் இருவரையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அன்புமணி, அதிமுக உடன் கூட்டணி பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானதும், டாக்டர் ராமதாஸ், திமுக உடன் கூட்டணி பேச்சை நடந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.திமுக பக்கம் செல்லும் முடிவை ராமதாஸ் எடுப்பதற்கு முன், அவரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக தான் சி.வி.சண்முகம் இன்று தைலாபுரம் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் டாக்டர் ராமதாசும் அதிமுக கூட்டணிக்கு வந்து விடுவார் என அதிமுக தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}