சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. மேலும், சென்னை கண்ணகி நகரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.
மு.க. ஸ்டாலின் அவர்களே- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}