சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான பாஜக.,விற்கு இது மிகப் பெரிய ஷாக்காக அமைந்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. இதில் பாஜக.,விற்கு மட்டும் 27 தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கியது. கடந்த முறையை விட இந்த முறை அதிக எம்எல்ஏ.,க்களை பெற வேண்டும் என பாஜக களம் கண்டது.
இந்த முறை அதிமுக ஆட்சி அமைந்தால் பாஜக, பாமக.,விற்கு அமைச்சரவையில் இடம் தரவும் அதிமுக தலைமை முடிவு செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த முறை பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால், தமிழகத்தில் பாஜக.,வின் பலம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாகப் போய் விட்டது. கடந்த முறை கிடைத்த 4 தொகுதிகள் கூட இந்த முறை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது எதிர்பாராத அதிர்ச்சியைத்தான் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் கொடுத்துள்ளது. அதிமுகவின் பலத்துடன் கரையேறி விடலாம் என்று எதிர்பார்த்தால் , அதிமுக மட்டும் கரையேறியுள்ளது. பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.
அதேசமயம், மறுபக்கம் யாரும் எதிர்பாராத வகையில், டாக்டர் அன்புமணி தலைமையிலான பாமக தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. அக்கட்சியின் செளமியா அன்புமணி உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். நீண்ட காலத்திற்குப் பிறகு அருமையான ஒரு தேர்தல் லாபத்தை சம்பாதிக்கிறது பாமக. குறிப்பாக டாக்டர் ராமதாஸை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்த அன்புமணிக்கு இந்தத் தேர்தலில் வன்னிய சமுதாயத்தினர் அவருடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை நிரூபித்து விட்டனர்.
அதே போல் அமமுக வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் முன்னிலையில் இருந்து வருகிறார். பாஜகதான் அதிமுகவுடன் பாமகவை சேர்த்தது, அமமுகவை வலுக்கட்டாயமாக கொண்டு வந்தது. இதற்காக ஓபிஎஸ்ஸை கூட பறி கொடுத்தது. ஆனால் இப்படிப் பார்த்து பார்த்து சேர்த்தும் கடைசியில் அது பாஜகவுக்கு பாதகமாக வந்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பாஜக இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றால் கூட்டணியில் பாஜக.,வின் கை ஓங்கியிருக்கும். அதிமுக.,வை பாஜக அபகரித்து விடும் என்பது போன்ற வாதங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்து வந்தன. ஆனால் அதிமுக தலைமை, பாஜக.,வை மிக திறமையாக கையாண்டு, தொகுதிகளை ஒதுக்கி உள்ளது என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மொத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி படு லாகமாக செயல்பட்டு அதிமுகவையும் காப்பாற்றியுள்ளார். தன்னையும் காப்பாற்றிக் கொண்டு விட்டார். மீண்டும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தொடரும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}