சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரையும் வெல்லும் நிலைக்குப் போய் விட்டது தவெக.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் இன்னொரு அதிர்ச்சியாக பாஜகவுக்கு பெரும் பின்னடைவு கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை எந்த இடத்தையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சம் 2 தொகுதிகளில் மட்டுமே அது முன்னுக்கும் பின்னுக்குமாக போய் வந்துக கொண்டுள்ளது. அதில் வென்றாலும் கூட பாஜகவைப் பொறுத்தவரை அது பின்னடைவுதான்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதிமுகவுடன் கூட்டணி சேர கடுமையான முயற்சிகள் எடுத்திருந்தது பாஜக. அதற்காக கடுமையான வழிகளையும் கூட அது பயன்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரமும் செய்திருந்தார். அப்படி நடந்தும் கூட பாஜகவுக்குப் பெரும் பின்னைடவு ஏற்பட்டிருப்பது அக்கட்சியினரை சோர்வடைய வைத்துள்ளது.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}