சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கேள்விக்கு ஏறக்குறைய பதில் கிடைத்து விட்டதால், தற்போது 2வது இடம் யாருக்கு, எதிர்க்கட்சியாக அமர போவது யார் என்ற கேள்வியை அனைவரும் எழுப்ப துவங்கி விட்டனர். 2வது இடத்தை பிடிக்க அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி அதிமுகதான் தவெகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சி 57 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ஆளும் கட்சியாக உள்ள திமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுகவுக்கு 43 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் சூழல் உள்ளது.

இன்று வெளியாகி வரும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 100 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. 2வது இடத்தில் அதிமுக.,வும், 3வது இடத்தில் திமுக.,வும் இருந்து வருகிறது.
திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்பி விட்டு தவெகவுக்கு வாய்ப்பு அளிக்கவும், தமிழகத்தில் மாற்று அரசியல், மாற்று ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என்பதையுமே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. அதே போல் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை முற்றிலுமாக புறக்கணிக்க தமிழக மக்கள் நினைத்துள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.
காரணம் கடந்த முறை வென்ற தொகுதிகளில் பாதியைக் கூட இந்த முறை காங்கிரஸ், பாஜக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக-திமுக இடையே கடும் போட்டி :
பகல் 12 மணி வரை 55 க்கும் குறைவான இடங்களில் முன்னிலை வகித்து 3வது இடத்தில் இருந்து வந்தது திமுக. ஆனால் 12 மணிக்கு மேல் தவெக.,வின் முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாத நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் முன்னிலை நிலவரங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுமே 60 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. அதிமுக கூட்டணி 68 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 60 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதனால் 2ம் இடத்தை பிடித்து, எதிர்க்கட்சி இருக்கையில் அமர இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.
மறுபக்கம் இதுவரை பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தவெக எட்டவில்லை. அதேசமயம், திமுக, அதிமுக கூட்டணிகளில், கூட்டணிக் கட்சிகள் கிட்டத்தட்ட 26 தொகுதிகளில் வெல்லும் சூழல் உள்ளது. அதில் ஒரு சில கட்சிகள் வந்தால் கூட போதும், தவெக ஈஸியாக ஆட்சியமைத்து விடும்.
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}