சென்னை: தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் திமுகவை முந்திக் கொண்ட அதிமுக, இன்று வேட்பாளர் பட்டியலிலும் திமுகை முந்தியது. முதல் கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அதிமுக - பாஜக இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக என பல கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில்தான் பாஜக, பாமக, அமமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று அதிமுகவின் அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கவுள்ளார்.
இந்தப் பின்னணியில் இன்று அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் இடம் பெற்றுள்ளனர்

1. எடப்பாடி (86) - எடப்பாடி K. பழனிசாமி (சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்)
2. வேப்பனஹள்ளி (54) - கே.பி. முனுசாமி, B.A., B.L., M.L.A. (துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
3. திண்டுக்கல் (132) - திண்டுக்கல் C. சீனிவாசன், M.A., MBA., M.L.A., (பொருளாளர் , திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
4. நத்தம் - இரா. விசுவநாதன், B.Sc., M.L.A., (துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
5. தொண்டாமுத்தூர் (119) - S.P.வேலுமணி, M.A., M.Phil., M.L.A. (தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
6. குமாரபாளையம் (97) - பி. தங்கமணி, B.A., M.L.A., (அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
7. ராயபுரம் (17) - D. ஜெயக்குமார், B.Sc., B.L., (அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
8. மைலம் (71) - C.Ve. சண்முகம், B.A., B.L., M.P., (அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
9. மதுரை மேற்கு (194) - செல்லூர் K. ராஜூ, B.Sc., M.L.A (அமைப்புச் செயலாளர் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
10. பாலக்கோடு (57) - K.P. அன்பழகன், M.L.A., (அமைப்புச் செயலாளர் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
11. நன்னிலம் (169) - R. காமராஜ், M.A., M.L.A. (அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
12. வேதாரண்யம் (165) - O.S. மணியன், M.L.A. (அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
13. விராலிமலை (179) - டாக்டர் C. விஜயபாஸ்கர், MBBS., M.L.A. (அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
14. கோவில்பட்டி - கடம்பூர் C. ராஜூ, D.T.Ed., M.L.A.,(அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
15. திருமங்கலம் (196) - R.B. உதயகுமார், B.Com., MSW., BL., M.L.A. (புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
16. சிவகாசி (205) - K.T.ராஜேந்திரபாலாஜி (அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
17. மதுரவாயல் (7) - பா. பென்ஜமின், B.A., (அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
18. கலசபாக்கம் (65) - அக்னி கிருஷ்ணமூர்த்தி B.Sc., (Agri.) B.L., M.L.A., (விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
19. திருப்பரங்குன்றம் (195) - V.V. ராஜன் செல்லப்பா, M.A., B.L., M.L.A., (அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)
20. பவானி (104) - K.C. கருப்பணன், M.L.A., (ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
21. ஜோலார்பேட்டை (49) - K.C. வீரமணி, B.A., (திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
22. கரூர் - M.R. விஜயபாஸ்கர் (கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
23. அரியலூர் (149) - தாமரை S. ராஜேந்திரன் (அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு முன்னாள் தலைமைக் கொறடா)
ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!
தங்கமே உன்னை ரசிக்கிறேன்.. ஆனாலும் கொஞ்சம் வெறுக்கிறேன்
ம.நீ.ம சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் அறிவிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு
திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு
எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு
{{comments.comment}}