தொடர்ந்து 2வது நாளாக அமித்ஷாவை சந்தித்த வேலுமணி...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

Jan 05, 2026,08:37 PM IST

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.பி.வேலுமணி, நேற்று இரவு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனின் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பொது இணைப்பு பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.


அமித் ஷா தனது தமிழக பயணத்தை நிறைவு செய்யும் முன், திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்களுக்குச் சென்றார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பாஜக ஏற்பாடு செய்துள்ள பொங்கல் கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்றார். 




இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்த வேலுமணி, இன்று மீண்டும் சென்று சந்தித்து பேசி உள்ளார். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசியதாக மீடியாக்களில் தகவல் பரவியது. ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அதிமுக-பாஜக கூட்டணியை முடிவு செய்த போதே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் நிறைவடைந்து விட்டதாக அதிமுக மற்றும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்து விட்டு தான் கூட்டணியை இறுதி செய்து, அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது வேலுமணி, அமித்ஷாவை சந்தித்தது தேர்தல் வியூகங்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது தொடர்பான விவகாரங்கள் குறித்து தான் பேசியதாக சொல்லப்படுகிறது.அதே போல் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்