சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை விரைவில் மாற்றப்படலாம் என்பது போன்ற தகவல் தான் கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. அண்ணாமலை எதற்காக மாற்றப்படுகிறார் என்பதை தாண்டி, அடுத்த தலைவர் யார் என்பது பற்றிய ஆலோசனை தான் மிகப் பெரிய விஷயமாக போய் கொண்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெகு விரைவில் மாற்றப்படுவது உறுதி என்பதை அறிந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகிகளான தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவர் பதவியில் அமர்வதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருமே ஏற்கனவே மக்களிடம் பிரபலமாக இருப்பவர்கள். கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களில் ஒருவர் தான் அடுத்த பாஜக தலைவர் என சொல்லப்பட்டு வந்தது.
பின்னர் சரத்குமாரின் பெயரும் இந்த லிஸ்ட்டில் அடிபட்டது. அவரது பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அவரும் டெல்லிக்குப் போய் விட்டும் வந்தார். இந்த நிலையில், இதில் புதிய ட்விஸ்டாக மற்றொரு நபரின் பேரும் தற்போது அடிபட்டு வருகிறது.
தமிழக பாஜக தலைவர் யார் என்ற போட்டியில் தற்போது முக்கியமானவராக சேர்ந்திருப்பவர் பாஜக வழக்கறிஞர் அணி தலைவராக இருந்தவரும், தற்போதைய பாஜக துணைத்தலைவருமான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் தான். தமிழக தலைவர் பதவிக்கு இவரது பெயரும் அடிபடுவதை கேள்விப்பட்டு மற்ற போட்டியாளர்கள் குழப்பமடைந்துள்ளனராம்.
பால் கனகராஜ் ஏற்கெனவே தனியாக ஒரு கட்சி துவக்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் அறிமுகமானவர் என்பதும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். தற்போது தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருப்பவர் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் வழக்கறிஞர்களிடம் அறிமுகமானவர் என்பதும் அவருக்கு கூடுதல் தகுதியாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.
பாஜகவில் பால் கனகராஜ் இணைந்த பிறகுதான் வழக்கறிஞர் அணி என்று ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்தான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்கறிஞர்களை பாஜகவில் சேர்த்து, பாஜக நிர்வாகிகளுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகி தீர்வு பெற்று தந்திருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் பால் கனகராஜின் ஆதரவாளர்கள் டெல்லி பாஜக மேலிட தலைவர்களுக்கு அனுப்பியுள்ள ஆதரவு கடிதங்களில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
நீண்ட கால வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர் என்பதுடன் தமிழ்நாட்டில் அதுவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தரவான பால் கனகராஜ், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நெருக்கமான நட்பு கொண்டிருப்பதையும் கூட அவரது ஆதரவாளர்கள் பாஜக மேலிடத்திற்கு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் பதவியை ஏற்பதற்கு பால் கனகராஜிற்கு மற்றவர்களை விட கூடுதல் தகுதி இருப்பதாக அவர்கள் ஆதரவாளர்கள் அழுத்தமாக பாஜக வட்டாரத்தில் பதிய வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
பால் கனகராஜின் ஆதரவாளர்கள், அவரை தமிழக தலைவராக்க தீவிரமாக முயற்சித்து வருவதைப் பார்த்து, அதே பதவியை குறி வைக்கும் மற்ற தலைவர்கள் கொஞ்சம் ஆடிதான் போய் இருக்கிறார்கள் என்ற தகவல் கமலாலயம் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
இதெல்லாம் நிஜமா சார், உண்மையா என்று பால் கனகராஜிடமே கேட்டபோது, தமிழக பாஜக தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்பதெல்லாம் அகில இந்திய பாஜக தலைவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுக்க கூடிய ஆற்றல் படைத்தவர் யார் என்பதை நன்றாக யோசித்தே பாஜக மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும். தலைவர் பதவிக்கான பரிந்துரைகளை எல்லாம் பாஜக மூத்த தலைவர்கள் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். அதனால், பாஜக தலைவர் பதவிக்கு நான் முயற்சி செய்கிறேன் என்பதெல்லாம் வதந்தி தான் என தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பாஜக தலைவர் யார் என்ற போட்டியில் அனல் கூடிக் கொண்டே வருவதால் அடுத்த தலைவர் யார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
{{comments.comment}}