சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6700க்கும், சவரன் ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம், அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இன்றி இருந்து வருகிறது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல தான் தங்கம் மற்றும் வெள்ளி. ஏன் என்றால் தங்கம் விலை உயர்ந்தால், வெள்ளி விலையும் உயரும். தங்கம் விலை குறைந்தால் வெள்ளி விலையும் குறையும். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது.இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. சரிங்க இன்றைக்கு என்ன விலை என்று பார்ப்போமா?
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,170 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,360 ஆக உள்ளது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ. 1.50 காசுகள் உயர்ந்து ரூ.97.10 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 776.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.95.600 விற்கப்பட்டது இன்று ரூ.97.100 விற்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு இன்று மட்டும் ரூ.1,500 உயர்ந்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}