டில்லி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடித்த கையிலோடு டில்லி திரும்பியதும் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய அறிவிப்பு அனைவரையும் அசர வைத்துள்ளது. பிரதமர் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராகி விட்டார் போல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த உடன் டில்லி திரும்பிய சில மணி நேரங்களிலேயே, பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற புதிய திட்டத்தை தான் அறிவித்துள்ளார் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளின் கூரையில் சோலார் தகடுகள் பதிப்பதே மத்திய அரசின் திட்டமாம். சூரிய ஒளி மூலம் மின்சார தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாம்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் இருந்து திரும்பியதும் நான் எடுத்துள்ள முதல் முடிவு, எங்களின் அரசு பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. உலகில் உள்ள அனைத்து பக்தர்களும் சூரிய வம்சத்தில் தோன்றி ஸ்ரீராமரால் ஒளி ஆற்றலை எப்போதும் பெறுகிறார்கள். இன்று ஒரு புனிதமான நிகழ்வு அயோத்தியில் நடந்துள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தங்களின் வீட்டின் மாடியிலேயே சூரிய ஒளியின் மூலம் தங்களுக்கு தேவையான ஆற்றலை பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
ஒரு கோடி வீடுகளில் சேலார் தகடுகள் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சார கட்டணத்தை குறைப்பது மட்டுமல்ல, மின்சார உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு நாடாக மாற வழி செய்யும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதை மனதில் பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக அரசியல் கட்சிகள் சில விமர்சித்தாலும், பலரிடமும் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் கோடை காலங்களில் மின்சார தட்டுப்பாடு, பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என பலரும் தெரிவித்துள்ளனர்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா முடிந்து விட்டதால், இனி அடுத்தடுத்த அதிரடி திட்டங்களை பிரதமர் அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}