டெல்லி: எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல் காந்தி தற்போது தான் வசித்து வந்த அதே வீட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி. கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கூறி தெரிவித்த கருத்துக்காக அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் ராகுல்காந்தியின் சிறைத் தண்டனையையும் கோர்ட் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி பதவியை வகிக்கும் தகுதியைப் பெற்றார். லோக்சபா செயலகமும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம் பி பதவியை வழங்கியது.
முன்பு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் உடனடியாக தனது வீட்டைக் காலி செய்து கொடுத்து விட்டார். தற்போது ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் பங்களாவை மீண்டும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}