மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் அகமதாபாத் நகரில் ஏற்பட்ட விமான விபத்து உலகையே கதிகலங்கச் செய்தது. இந்த விமான விபத்தில் ஒரு பயணியை தவிர்த்து மற்ற 242 பயணிகளும் உயிரிழந்தனர். அதுமட்டும் இன்றி விமானம் விழுந்த மருத்துவக்கல்லூரி கட்டட விடுதியில் இருந்த மாணவர்களும் பலியாகினர். இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் வெளியே வருவதற்குள் தற்போது மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து டின்டா பகுதிக்கு அங்கார ஏர்லைன்ஸ் நிறுவனத்திவ் ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் டின்டா அருகில் சென்ற போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு தூண்டித்ததாகவும், அதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. அந்த விமானம் மாயமானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், சில நிமிடங்களிலேயே சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆமுர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகின.
விமானம் நொறுங்கிய சில பாகங்கள் அந்த பகுதியில் கண்டறியப்பட்டன. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், தற்போது விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினரை தற்போது ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}