டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக. இதில் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் வெளியாகவில்லை. இதை பல்வேறு கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்சிகளும் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல்வேறு குழுக்களை அமைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 23 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அரசு நியமித்து அதிகரிப்பூர்வமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுத் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மற்றும் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோரை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}