சென்னை : அதிமுகவுக்குள் உட்கட்சிப் பூசலும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பரபரப்பும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக பறிகொடுத்தது, கட்சித் தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலுமணி இல்லத்தில் குவிந்த மூத்த தலைவர்கள்:

இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் இன்று மீண்டும் கூடித் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுக்குழுவைக் கூட்டத் திட்டமா?
கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுக்குழுவைக் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக ஆராயவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பொதுக்குழுவே சரியான களமாக இருக்கும் என அவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதிமுக.,வின் இந்த தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமியின் தவறான அரசியல் நகர்வுகளே காரணம் என அதிருப்தி தலைவர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியில் பொதுச் செயலாளர் இபிஎஸ்.,க்கு எதிரான குரல்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அதிமுகவின் எதிர்கால நடவடிக்கை:
அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தொடர்ந்து நடத்தி வரும் இந்த அவசர தொடர் ஆலோசனைகள், தலைமைக்கு எதிரான நகர்வா அல்லது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான மறுசீரமைப்பு முயற்சியா என்பது குறித்து தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன. தோல்வியில் இருந்து மீண்டு வரவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் பொதுக்குழு கூட்டப்படுமா அல்லது கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
அதிமுகவில் அடுத்த புயல்: இடைத்தேர்தல் தோல்வியால் தொடரும் மூத்த தலைவர்களின் அவசர ஆலோசனை!
நன்றி மோடிஜி.. சோர்ந்து கிடந்தோம்.. இப்ப Brisk ஆயிட்டோம்.. டாக்டர் தமிழிசை ஹேப்பி!
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடலூர் வள்ளலார்.. நமது வரலாறே நமது அடையாளம்!
நினைத்தது நடந்ததே
A good book can change your life
I really miss you
The Fear of the Unknown
{{comments.comment}}