ஈரோடு கிழக்கில் வெல்வோம்.. "செங்கோட்டை"யை ஆச்சரியப்படுத்துவோம்.. செங்கோட்டையன்

Jan 29, 2023,02:55 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கில் மாபெரும் வெற்றி பெற்று, டெல்லி "செங்கோட்டை"க்கு ஆச்சரியத்தைக் கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் ,அதிமுக மூத்த தலைவருமான  கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்  சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.



தேமுதிக ஏற்கனவே வேட்பாளரை அறிவித்து விட்டது. நாம் தமிழர் கட்சியும் தனது சார்பில் வேட்பாளரை அறிவித்துள்ளது. அமமுக கூட போட்டியிடுகிறது, வேட்பாளரையும் கூறி விட்டது. ஆனால் மறுபக்கம் அதிமுக கூட்டணியிலிருந்து இன்னும் எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை. அதிமுகதான் போட்டியிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால் இதுவரை வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. பாஜகவும் பலத்த அமைதி காக்கிறது. ஓ.பி.எஸ்ஸும் தனது நேரத்துக்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் வென்று டெல்லி செங்கோட்டைக்கு ஆச்சரியத்தைக் கொடுப்போம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கில் எங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றி, செங்கோட்டையை அதிர வைக்கும்,ஆச்சரியப்படுத்தும். இந்தத் தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

தொண்டர்கள் கட்சியின் வெற்றியை மனதில் வைத்து தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். கட்சியின் நிர்வாகக் குழு விரைவில் கூடி வேட்பாளரை இறுதி செய்யும் என்றார் செங்கோட்டையன்.

இந்தத் தேர்தலில் பாமகவும், சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடவில்லை, ஒதுங்கி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்