- சுமதி சிவக்குமார்
சின்னசேலம்: 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 'பேடே சேல்' என்ற பெயரில் விமானக் கட்டணங்களில் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அதாவது முன்பதிவு காலம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 நள்ளிரவு (23.59 மணி) வரை உள்ளோருக்கு இந்த சலுகை கிடைக்கும். உள்நாட்டுப் பயணிகள் ஜனவரி 12 முதல் அக்டோபர் 31 வரை தாங்கள் விரும்பும் தேதிகளில் இந்தச் சலுகையைப் பயன்படுத்திப் பயணிக்கலாம்.
இதன் ஆரம்பக் கட்டணம் என்று பார்த்தால், உள்நாட்டு விமானக் கட்டணம் ₹1,950 முதல் தொடங்குகிறது. அதுவே சர்வதேச விமானக் கட்டணம் ₹5,335 முதல் தொடங்குகிறது.
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய www.airindiaexpress.com என்ற இணையதளத்தை அணுக வேண்டும். அதுதவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப் (Mobile App) சென்றும் முன்பதிவு செய்யலாம். நேரில் செய்வதாக இருந்தால், அனைத்து முக்கிய விமான டிக்கெட் முன்பதிவு மையங்களையும் அணுகலாம்.
சொந்த ஊர் செல்லத் திட்டமிடுவோர் அல்லது சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!
எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நட்பு
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
கள்ளக்குறிச்சி பூங்காவில் களை கட்டும் கூட்டம்.. படகு சவாரி, நீச்சல் குளம்.. கொண்டாட்டம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
ராத்திரியானா சவுண்டு ஜாஸ்தியா இருக்கா.. குறட்டையை நிறுத்தும் இயற்கை வைத்தியம்!
{{comments.comment}}