- க. யாஸ்மின் சிராஜூதீன்
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவும் காப்பு.. என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நட்பு என்பது நமக்கு பாதுகாப்பு தருவதே என கூறி இக்கட்டுரையை தொடங்குகிறான்.
நட்புக்கில்லை எல்லை அது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறந்த உறவு. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதிர்பார்ப்பில்லா நட்போடு மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் தோள் கொடுத்து நானிருக்கிறேன் என தன்னம்பிக்கை ஊட்டும் உன்னதநட்பு. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு நட்புக்கு இலக்கணம். பல்வேறு தருணங்களில் நட்பு மலர்கிறது. இது பாதுகாப்பு எனும் கவசமாக உள்ளது.
மனிதன் ஒரு சமூக விலங்கு. தனியாக வாழ முடியாது.அப்படி வாழ்வது இன்பம் தருமா அல்லது துன்பங்களை நீக்குமா. வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் நடக்கும் நிழல் போன்றவர்கள் நண்பர்கள். “நண்பன் என்றால் நலன் கூறுபவன்” என்பது பழமொழி.
நண்பர்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் துணிவையும் அளிப்பவர்கள். சிரம நேரங்களில் துணை நின்று ஆறுதல் கூறுவார்கள். வெற்றி பெற்றால் வாழ்த்துவார்கள்; தோல்வி அடைந்தால் ஊக்கம் அளிப்பார்கள். உண்மையான நண்பர்கள் நம்முடைய தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவார்கள்.

பள்ளி நாட்களில் உருவாகும் நட்பு மிகவும் இனிமையானது. ஒன்றாகப் படித்து, சண்டை போட்டு, விளையாடி, திண்பண்டங்களைப்பகிர்ந்து, அனுபவங்களைப் பகிர்ந்து, பேனா,பென்சில் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவி, கற்பித்தலும் நடக்கும் எது யாருக்கு தெரியாதோ அதை ஒருவருக்கொருவர் வா நான் சொல்லித் தருகிறேன் என ஒன்றாக படிப்பார்கள்.தெருக்களில் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுவார்கள் ( இப்போது அலைபேசியில் மூழ்கி மகிழ்வான தருணங்களை இழக்கிறார்கள்).
எத்தனை எத்தனையோ மகிழ்வான தருணங்கள் என் மனதில் ஊஞ்சலாடுவதைப் போல இதை படிக்கும் அனைவரின் மனங்களும் சோலைவனமாக பூத்துக் குலுங்கும் தன் குழந்தைப்பருவ நட்பு எனும் வானில்.என்ன நண்பர்களே மகிழ்ச்சி தானே ..சரி வாங்க தொடர்ந்து பேசுவோம். நல்ல நண்பர்கள் நல்ல பழக்கங்களையும் ஒழுக்கத்தையும் வளர்க்க உதவுவார்கள்.மீண்டும் பெறமுடியாத நாட்கள் இவை பசுமரத்தாணியாய் மனதில் பதிந்த பொக்கிஷம்.
நம்பிக்கை, நேர்மை, பரிவு, பகிர்வு ஆகியவை உண்மையான நட்பின் அடையாளங்கள். சுயநலம் இல்லாத அன்பே நட்பின் அடித்தளம். கஷ்டத்தில் கைவிடாமல் இருப்பதே உண்மையான நட்பு .நானிருக்கிறேன் என்பதே நமக்கு பாதுகாப்பு கவசம்.
நண்பர்கள் வாழ்க்கையின் செல்வம். நல்ல நண்பர்களை தேர்வு செய்து, நட்பை பேணிக் காக்க வேண்டும். சிறந்த நட்பு நம்மை சிகரத்தில் ஏற்றும். எல்லா வயதிலும் பல்வேறு தருணங்களிலும் ஏன் பயண நேரங்களிலும் கூட நட்பு மலர்கிறது நட்பை சொல்லில் சொல்லி முடிக்க முடியாது இது ஆத்மார்தமானது. வீட்டு விசேஷங்களிலும் , பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் ஒன்று கூடி மகிழ்வது நட்பு. எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதிப்பது நட்பு மட்டும் தான். நட்புக்கு வயது தடையில்லை நட்பு எனும் அட்சய பாத்திரம் அன்பை அள்ளித்தரும். நம் அனைவருக்கும் நட்பு என்பது பாதுகாப்பு கவசம் என்பதில் ஐயமில்லை.. நட்பு மலர் வாசம் உலகம் முழுவதும் வீசும்..
((கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
இளமை திரும்பிய தருணம்.. கூடுவாஞ்சேரியில் கோலாகலமாக நடந்த மூத்த குடிமக்கள் சங்கமம்
நட்பு எனும் கவசம்
ஆச்சரியம் ஆனால் உண்மை
கற்ற கல்வி உதவுமா?
கலகலக்க வைக்கும் கிராமத்து விளையாட்டுகள்.. அது ஒரு பொற்காலம்!
"என்னை மூச்சடைக்க வைக்காதே அர்ஜூன்".. (நீ மழை.. 5)
T20 World Cup: ஈடன் கார்டனை அதிர விட்ட சேட்டன் சஞ்சு.. செம ஆட்டம்.. செமி பைனலில் இந்தியா!
Iran Flashback: அயதுல்லா கொமேனி யார் தெரியுமா?.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள லிங்க்!
{{comments.comment}}