குருகிராம்: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நான்கு நாட்களில் குருகிராமில் உள்ள அலுவலகத்தில் பார்ட்டி நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளனர் நான்கு மூத்த ஏர் இந்தியா அதிகாரிகள். அவர்களை ராஜினாமா செய்ய நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாம்.
குருக்ராமில் நடந்த அலுவலக பார்ட்டி வீடியோ வைரலானதை அடுத்து, ஏர் இந்தியா SATS (AISATS) நிறுவனத்தின் நான்கு மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 259 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் துக்கம் நிலவிய நிலையில், AISATS தலைமை இயக்க அதிகாரி ஆபிரகாம் சக்கரியா மற்றும் பிற ஊழியர்கள் இசைக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்று நடந்த உடனேயே இந்த கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது மனிதாபிமானமற்றது, மிகவும் மோசமான செயல் என்று பலரும் கண்டித்தனர். விபத்துக்குப் பிறகு நடந்த பார்ட்டி பலரின் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பலரும் நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள AISATS நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "AI171 விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் வெளியான வீடியோவில் நடந்த தவறை நாங்கள் வருந்துகிறோம். இந்த நடத்தை எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இரக்கத்துடனும், தொழில்முறையுடனும், பொறுப்புடனும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.
பார்ட்டி எப்போது நடந்தது என்பதை AISATS நிறுவனம் குறிப்பிடவில்லை. ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நான்கு மூத்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AISATS என்பது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த SATS Ltd. ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பாகும்.
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
{{comments.comment}}