டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானிகள் ஒட்டுமொத்தமாக மாஸ் லீவ் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பல்வேறு சேவைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விடுப்பு எடுத்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானிகள் மொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர். ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக மாஸ் லீவு எடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் 86 சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏர் இந்தியாவில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு - டெல்லி, கோழிக்கோடு - துபாய், குவைத் - தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட 79 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஏர் இந்தியா விமானங்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் முன்பு மத்திய அரசிடம் இருந்தது. அதை டாடா நிறுவனத்திடம் மத்திய அரசு விற்று விட்டது. டாடாவுடன் ஏர் இந்தியா இணைந்த பிறகு விமானிகள், ஊழியர்களை சமமாக டாடா நிறுவனம் நடத்தவில்லை என்ற பிரச்சினை எழுந்தது.. இதுதொடர்பான பிரச்சினையால்தான் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், நேற்று இரவு முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிக்கலை தீர்க்க எங்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு ஏதேனும் அசௌவுகரியத்திற்காக, பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பலர் தங்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக எந்த ஒரு தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துக் குமுறல் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பயணிகளின் சிரமத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது. பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பிக் கொடுத்தல் அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஒரு தேதிக்கு பயண டிக்கெட் வழங்குவது ஆகியவை செயல்படுத்தப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}