டெல்லி: இஸ்ரேலுக்கும் - ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் தொடர்நது நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பெரும் மோதல் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு வந்திருந்த ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. பலமுனைகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்க அது ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை எதிர்த்து முறியடிக்க இஸ்ரேலும் ஆயத்தமாகி வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது. பதட்டமும் தணியவில்லை.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இயக்கி வரும் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது இதை காலவரையற்ற முடிவாக அது மாற்றியுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வரும் எங்களது விமான சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து நிலைமையைக் கவனித்து வருகிறோம். டெல் அவிவ் நகருக்கு டிக்கெட் புக் செய்திருந்த அனைத்துப் பயணிகளுக்கும் அவர்களது பயணக் கட்டணம் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டு விடும்.எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்களது பிரதான முக்கியமாக இருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}