சென்னை மெட்ரா ரயில்களில்..  பயணிகள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. இதாங்க காரணம்!

Jan 07, 2023,12:59 PM IST
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.  மக்களின் வெகு ஜன போக்குவரத்தில் மெட்ரோ ரயில்கள் தனி இடம் பிடித்து வேகமாக பிடித்து முன்னேறத் தொடங்கி விட்டதே இதற்குக் காரணம்.



சென்னை பொதுப் போக்குவரத்து ஒரு காலத்தில் சாலை மற்றும் புறநகர் ரயில்களாக மட்டுமே இருந்து வந்தது. சாலைப் போக்குவரத்தை விட்டால் அடுத்து புறநகர் ரயில்கள் என்ற அளவில் மட்டுமே இருந்து வந்தது. இதனால் பஸ்களிலும் கூட்டம் அலை மோதும். புறநகர் ரயில்களிலும் நிறைய கூட்டம் இருக்கும்.

மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே அடுத்தடுத்த போக்குவரத்து சமாளிப்புகளில் மாநில அரசும், மத்திய அரசும் இறங்கின. அதன் படி மாடி ரயில் அறிமுகமானது. இது ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியது. ஆனால் அதுவும் இப்போது போதாது என்ற நிலை ஏற்படவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

மெட்ரோ ரயில் வந்ததும் சென்னை நகர போக்குவரத்தின் முகமே மாறிப் போய் விட்டது. எங்கெல்லாம் எளிதில் போக முடியாதோ அங்கெல்லாம் இப்போது மெட்ரோவில் ஏறி சுலபமாக போய் வர முடிகிறது. குறிப்பாக அண்ணா சாலைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் பஸ் போக்குவரத்துதான் மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால் மெட்ரோ வந்ததற்குப் பிறகு இப்போது ரயிலில் எளிமையாக செல்ல முடிகிறது.

அதேபோல வட சென்னையின் பல உட்புறப் பகுதிகளுக்கும் மெட்ரோவில் எளிதாக பயணிக்க முடிகிறது. இந்தப் பக்கம் கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி என மெட்ரோ ரயில், மக்களின் போக்குவரத்து அலைச்சலை வெகுவாக குறைத்து விட்டது. மெட்ரோவில் சமீப காலமாக பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க இன்னொரு முக்கியக் காரணம் உள்ளது.

வெளியில் ஆட்டோ, டாக்சி கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மெட்ரோவில் கட்டணம் மிக மிக குறைவு. 50 ரூபாய் இருந்தால் போதும் மிக நீண்ட தூரத்தையும் கூட எளிதாக அடைந்து விட முடிகிறது. அலைச்சலும் இல்லை. வியர்க்க விறுவிறுக்க, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியதில்லை. குளுகுளு வசதியுடன் ஆடாமல் அசையாமல் அலுங்காமல் குலுங்காமல் போய் விட முடிகிறது. இதுதான் மக்கள் அதிக அளவில் மெட்ரோவை நாட முக்கியக் காரணம்.

குறிப்பாக விமான நிலையம் செல்வதற்கும், கோயம்பேடு பஸ் நிலையம் செல்வதற்கும் மெட்ரோதான் மிகச் சிறந்த வழி. தேவையில்லாத டென்ஷனைக் குறைத்து பயணத்தையும் என்ஜாய் செய்ய முடிகிறது.  விமான நிலையம் செல்ல விரும்புவோரில் முக்கால்வாசிப் பேர் இப்போது மெட்ரோவைத்தான் நாடுகின்றனர். விமான நிலையத்திலிருந்து வருவோரும், மெட்ரோவில் ஏறித்தான் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு பயணப்படுகின்றனர்.

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10,000 பேர் வரை வருவதும், இறங்குவதுமாக உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.  இதில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் வருவபவர்களாக உள்ளனர். ஒரு இடத்திலிருந்து விமான நிலையம் வர ஆட்டோ என்றால் குறைந்தது 200 ரூபாயாவது கொடுக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் 500 வரை தர வேண்டியுள்ளது. ஆனால் வெறும் 50 ரூபாயில் மெட்ரோ மூலம் விமான நிலையம் வர முடிவது மக்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.

மெட்ரோவில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. வேகமாக நடந்து வரும் இந்தப் பணிகள் முழுமை அடையும்போது சென்னை மக்களுக்கு மிகப் பெரிய அளவில் மெட்ரோ நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்