அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

May 30, 2026,01:46 PM IST

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பின் காலமாக உயிரிந்த அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது தாயாரின் இறுதி சடங்குகள் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மட்டுமே நடைபெறும் என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் முதல்வர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கல் இரங்கலை தெரிவித்துள்ளனர்.


முதல்வர் விஜய் இரங்கல்:




தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மு.க.ஸ்டாலின் இரங்கல்:


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அன்புச் சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்:


திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் திரு. அஜீத் குமார் அவர்களின் 

தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். 


பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,  அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசன் இரங்கல்:


உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்தியில், "சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


கவிப்பேரரசு வைரமுத்து அஞ்சலி:


கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் கவிதையில், "அன்புச் சகோதரர் அஜித் குமார் அவர்களின் அன்னையார் மறைவுற்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அம்மையாருக்கு என் அஞ்சலி. இந்த இழப்பில் துயரமடையும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். நல்ல கலைஞனைப் பெற்றுக்கொடுத்த பெருமாட்டியின் ஆருயிர் அமைதியுறுக" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


அஜித் குமாரின் தாயார் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

The Left Hand That Wrote a Destiny.. விதியைத் தீர்மானித்த இடது கை!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்