மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் அஜித் பவார்.. பரபரப்பை கிளப்பிய பிரித்விராஜ் சவான்

Jul 25, 2023,09:39 AM IST
மும்பை : அஜித் பவார் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் என காங்கிரஸ் தலைவரும் , மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் பேசி உள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தற்போது மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே இருந்து வருகிறார். இவர் சிவசேனாவில் இருந்தவர். அந்தக் கட்சியை உடைத்துக் கொண்டு, பாஜக பக்கம் தாவி  கூட்டணி வைத்து முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் பாஜகவைச் சேர்ந்தவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ்தான் முக்கிய முடிவுகளின் பின்னணியில் இருப்பதாக ஏற்கனவே வதந்தி உள்ளது.



அடுத்த தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைக்கப்பட்டது. அதிலிருந்து தாவி வந்த அஜீத் பவார் துணை முதல்வராக்கப்பட்டார். அஜீத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தம்பி ஆவார். என்னதான் கட்சி தாவினாலும், கட்சியை உடைத்தாலும் கூட அண்ணனும் தம்பியும் சுமூகமாகத்தான் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான், வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அஜித் பவார் மகாராஷ்டிர முதல்வராக்கப்படுவார். சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஆகஸ்ட் 10 ம் தேதி அஜித் பவார் முதல்வராக பதவியேற்பார். முதல்வர் ஷிண்டே தகுதிநீக்கம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 10 ம் தேதி 15 சிவசேனா எம்எல்ஏ.,க்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்றார்.

எந்த தகவலின் அடிப்படையில் தான் இப்படி சொல்கிறேன் என்பதை சொல்ல பிருத்விராஜ் மறுத்து விட்டார். இது நீண்ட நாட்களாகவே போய் கொண்டிருக்கும் பேச்சு தான். தற்போது தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருப்பதால் இது நடக்க போகிறது. ஷிண்டேவிற்கு எதிராக ஒரு குரூப் சபாநாயகரிடம் புகார்  அளித்துள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 10 வாக்கில் அறிவிக்கப்படும். தகுதி நீக்கத்தில் இருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது என்றார்.

மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் காமெடி நடந்து கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த அரசியல் கொடுமையை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ள போதிலும் கூட தொடர்ந்து அதே பாணி அரசியல்தான் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்