மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!

Dec 29, 2025,11:30 AM IST

- தி. மீரா


அக்காரவடிசல் (Akkaravadisal) என்பது வைணவக் கோயில்களில், குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உன்னதமான இனிப்பு வகை பிரசாதமாகும். இது சர்க்கரைப் பொங்கலைப் போன்ற தோற்றம் கொண்டாலும், அதன் சுவையும் செய்யும் முறையும் முற்றிலும் மாறுபட்டது.


சர்க்கரைப் பொங்கல் பொதுவாகத் தண்ணீரில் வேகவைக்கப்படும். ஆனால், அக்காரவடிசல் என்பது முழுக்க முழுக்கப் பாலிலேயே அரிசியும் பருப்பும் வெந்து உருவாவதாகும். இதில் தண்ணீர் சேர்க்கப்படுவதில்லை என்பதே இதன் ரகசியம்.


மார்கழி மாதத்தில் இந்த அக்காரவடிசல் மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த அக்காரவடிசலை நாமே வீட்டில் சூப்பராக தயாரிக்கலாம்.. செய்து பார்ப்போமா.. வாங்க சமையல் கட்டுக்குள் போவோம்.


அக்காரவடிசல் செய்யத் தேவையானவை:




பச்சரிசி கால் கிலோ

பச்சைப் பருப்பு-100 கிராம்

வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்)

ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்


இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.


அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்பிடித்துவிடும்.


அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.


செய்முறை 


அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காய வையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.


அரிசி ஒரு பங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.


வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள்.


பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.


கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள். நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். சூப்பராக இருக்கும்.  ஒருதடவை செய்து பாருங்களேன்.. சொக்கிப் போய்டுவீங்க, டேஸ்ட்டில்!


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

தோல்வியிலிருந்துதான் நிறைய கற்கிறோம்.. We learn little from victory, much from defeat

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

மோட்சத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

news

மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்