- க.யாஸ்மின் சிராஜூதீன்
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
விடுமுறை அனுபவங்கள் பேசலாம்.....
மழலைகள் கூறும் கதைகளைக்கேட்கலாம்
முகத்தில் பல பாவனைகள் பார்க்கலாம்......
அடுத்த வகுப்புக்கு செல்ல தேர்ச்சியை கூறலாம்
பிரியாவிடை கொடுத்து
அடுத்த வகுப்பிற்கு அனுப்பலாம்.......
புதிய மாணவர் வருகையை வரவேற்றிடலாம்
இன்முகத்துடன் அறிமுகம் ஆகலாம்......
புதியதொரு தாய் சேய் உறவை
தொடங்கலாம்
அளவில்லா அன்புப் பரிமாற்றம்
காணலாம்......
ஆடல் பாடல் என கற்றல் தொடங்கலாம்....
எழுத்தினை எழுதி கையெழுத்தை அழகாக்கலாம்...
செயல்பாட்டில் ழூழ்கலாம்
படிப்படியாக கற்றலை மேம்படுத்தலாம்......
கண்கவர் கற்றல் கற்பித்தல்
உபகரணங்கள் பயன்படுத்தலாம்.....
பாகுபாடின்றி அனைத்து பிள்ளைகளையும்
செயல்பாட்டில் பங்கேற்கச் செய்யலாம்.....
எண்ணும் எழுத்தும் கற்றிடலாம்
ஆர்வமுடன் பள்ளிக்கு வந்திடலாம்....
விடுமுறை என்பதை மறக்கலாம்..
தினமும் பள்ளி வேண்டும் என ஏங்கலாம்.....
தினம் தினம் புத்தம் புது திறனை பெற்றிடலாம்....
எழுதி ,பேசி , நடித்து, வரைந்து
மகிழலாம்.......
கல்வியை அளிக்க அரசு பள்ளி
தாயாக இருக்கையிலே...
கைகளை நீட்டி ஏறி அமர்ந்திடு
சிறந்த சிம்மாசனத்தை உலகம் உனக்கு அளித்திடுமே.... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}