மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜல்லிக்கட்டுன்னா அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் என்று கூறும் அளவிற்கு உலகப்பெயர் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடியசைத்து கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தொடங்கி வைத்தார். போட்டியில் வணிகவரித்துறை அமைச்சர் ப.மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முதல் சுற்றிலிருந்தே போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது. 1200 காளைகள் பங்கேற்ற நிலையில், நேரமின்மை காரணமாக 652 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. ஒரு மணி நேரம் போட்டி நேரமும் அதிகரிக்கப்பட்டது. 800 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தை பூவந்தி அபி சித்தர் 2வது இடம் பிடித்தார். இவர் 17 காளைகளை அடக்கினார். இவர் கடந்த 2023ம் ஆண்டு முதலிடம் பிடித்த சாதனையாளர் ஆவார்.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும், போட்டியின் போது முறைகேடு நடந்தாக அபி சித்தர் பரபரப்பு குற்றம் சாட்டினார். போட்டி நேரத்தை அதிகரித்தது தவறு. தான்தான் முதலில் இருந்து வந்ததாகவும், தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் அமைச்சர் மூர்த்தி தனக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார் அபி சித்தர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த ஹைகோர்ட் கிளை, ஜல்லிக்கட்டு விழா கமிட்டி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தின் தொடக்க விழாவையொட்டி நடந்த போட்டியிலும் கலந்து கொண்டார். அப்போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்து, மகிந்திரா தார் ஜீப் பரிசாக கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}