மாஸ்கோ: ரஷ்ய சிறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் நல்லடக்கம், வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மரியினோ மாவட்டத்தில் உள்ள போரிஸோவ்ஸ்கோயே கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். முன்னதாக அவரது உடல் அடக்கம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. மேலும் சில கல்லறைத் தோட்டங்கள் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்ததால் புதிய குழப்பமும் ஏற்பட்டது. தற்போது எல்லாம் சரியாகி உடல் அடக்கம் முடிவாகியுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் அலெக்ஸி நவல்னி. அவரது மறைவு குறித்து இதுவரை அதிபர் விலாடிமிர் புடின் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். புடின்தான் இதற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் பிடன் உள்ளிட்டோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடுமையான புடின் எதிர்ப்பாளரான நவல்னி தொடர்ந்து அவருக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்ஸி உடல் அடக்கத்திற்கு திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரது அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}