சென்னை: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்று என பெண் வாக்காளர்களுக்காக பிங்க் நிற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்களும் பெண்கள்தான்.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்கு மையங்கள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு வாக்குச்சாவடி பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் மூதாட்டிகள் என தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாக்குச்சாவடியில் பணிபுரியப் போவதும் பெண்கள்தான். அதாவது தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் அனைவருமே பெண்களாக இருப்பார்கள். அனைவரும் பிங்க் நிற ஆடை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பிங்க் நிற மகளிர் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்து தேர்தல்களில் அதிகளவில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}