டில்லி : தமிழக பாஜக.,வில் இருக்கும் உட்கட்சி பூசல்களை சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும், தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காகவும் ஆலோசனை நடத்த வருமாறு தமிழக பாஜக தலைவர்களுக்கு டில்லி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் இன்று காலை அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றனர். நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன், எல்.முருகன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அனைவரும் டில்லி புறப்பட்டு சென்றனர்.
ஆனால் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மட்டும் டில்லி செல்லவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, திருமணங்கள் மற்றும் முக்கிய வேலைகள் இருந்ததால் தான் டில்லிக்கு செல்லவில்லை என்றார். ஆனால் இதில் ஏதோ விவகாரம் இருப்பதாக மீடியாக்களில் தகவல் பரவி வந்தது.

இதற்கிடையில் டில்லியில் அமித்ஷா இல்லத்தில் நடத்த தமிழக பாஜக தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் தேர்தலுக்கு முன் உட்கட்சியில் இருக்கும் பூசல்களை களைய வேண்டும். தமிழக பாஜக.,வில் உட்கட்சி பூசல் இருப்பது கட்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் பாஜக நிர்வாகிகள் சிலருக்கு கருத்து முரண்பாடுகள் இருப்பதாக விசாரித்ததில் தெரிய வந்துள்ளது என கூறி உள்ளார்.
இதற்கு முன்பு டில்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும் கட்சி தலைமை சார்பில் இதே போன்ற ஒரு மறைமுக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. "தமிழகத்தில் யார் யார் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். கட்சியையோ, கூட்டணியையோ பிளவு படுத்தும் வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் அதை பார்த்துக் கொண்டு கட்சி தலைமை சும்மா இருக்காது. தேர்தல் வேலைகளில் மட்டும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
கூட்டணியை பிளவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை விமர்சிப்பவர்களை வேண்டிக்கை பார்த்துக் கொண்டு கட்சி தலைமை இருக்காது. அப்படி செய்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என பாஜக தலைமை மிக கடுமையாக எச்சரித்துள்ளதாம். அதனால் தான் சமீப காலமாக தமிழக பாஜக.,வில் மாநில தலைவர் என்ற முறையில் நயினார் நாகேந்திரனே பேசி வருகிறார். அவரை தவிர மற்ற யாரும் பெரிதாக கருத்து சொல்லாமல் அமைதி காப்பதற்கு இது தான் காரணம் என பாஜக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}