சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான பொன்னை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு, அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஐந்தாம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென பத்து பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை விசாரணைக்காக போலீசார் நேற்று காலை மாதவரம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் தப்பிக்க முயன்று, துப்பாக்கி சூடு நடத்தி போலீசாரை தாக்கி உள்ளார். உடனே தற்காப்பு கருதி போலீசார் பதிலுக்கு சம்பவ இடத்திலேயே திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 10 நாட்களில் ஏன் விசாரணைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.. அதன் அவசியம் என்ன.. என எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இது தவிர குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தீர்வாகாது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தால் கைது செய்யப்பட்ட மீதமுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் கலக்கமடைந்தனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி பொன்னை பாலுவை, குற்றவாளி திருவேங்கடம் போல் போலீசார் சுட்டு கொன்று விடக் கூடாது என பாதுகாப்பு கருதி அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}