வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

Sep 12, 2025,01:25 PM IST

சென்னை: விழுப்புரம், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலவலகத்திற்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டதால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பாமகவில் மட்டும் உட்கட்சி பூசல் தீவிரம் அடைந்துள்ளது.  பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பல மாதங்களாக மோதல்  போக்கு நிலவி வருகிறது. கட்சியின் செயல் தலைவரான அன்புமணி மீது பல குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் முன் வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் அன்புமணி தலைமையில் பொதுக் குழு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுகு்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு 10 நாட்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. 


இதற்கு அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ பதிலோ அளிக்கப்படவில்லை. இதனையடுத்து மீண்டும் 10 நாட்கள் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இருந்தும் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று விழுப்புரத்தில் உள்ள தைலாபரத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுக்களுக்கு இரு முறை அவகாசம் அளித்தும் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அவர் உண்மை என்றும், சரியானது என்றும் ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொள்கிறோம்.




இதனால் கட்சியை பிளவுபடுத்தும் வகையில், கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், அரசியல் தலைவராக இருக்கும் தகுதி இல்லை என்ற காரணத்தால் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக அன்புமணி நீக்கப்படுகிறார்.  கட்சியை சேர்ந்த யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 


அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி துவக்கிக் கொள்ளலாம். அன்புமணி, என்னுடைய இன்ஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பாமக என்பது ராமதாஸ் என்ற தனி மனிதனால் மிகுந்த கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சி. இதில் அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் தனிக்கட்சி துவங்கினாலும் அது வளராது. அன்புமணி நீக்கப்பட்டதால் பாமக.,விற்கு பின்னடைவு என சிலர் நினைக்கலாம். ஆனால் இதனால் பின்னடைவு கிடையாது. விளை நிலத்தில் பயிர்கள் விளைய களை எடுப்பது போல், கட்சியின் வளர்ச்சிக்காக, நன்மை கருதி களைகள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், வருகின்ற 17ம் தேதி விழுப்புரத்தில் உள்ள வன்னியர் சங்கத்திற்கு அன்புமணி வருகை தர உள்ள நிலையில், அன்புமணியின் வருகையை எதிர்க்கும் வகையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் வன்னியர் சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் வன்னியர் சங்க அலுவலக வளாகத்தில் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!

news

சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

அதிகம் பார்க்கும் செய்திகள்