திருப்பாவை பாசுரம் 09 :
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
பொருள் :
தூய்மையான மணி கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடம் முழுவதும் விளக்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. இனிய மனங்களை உடைய சாம்பிராணி போன்ற தூபங்களால் மனம் வீசும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் மாமனிதரின் மகளே வந்து உன் வீட்டின் கதவுகளை திற. மாமனிதரின் மனைவியே, அவளை எழுப்பி விடுங்கள். உங்கள் மகள் என்ன பேச முடியாதவளா? அல்லது காது கேட்காதவளா? மந்திரத்தால் மயங்க வைக்கப்பட்டவள் போல் இப்படி தூங்குகிறாளே? மன்னனுக்கு எல்லாம் பெரிய மன்னன், மாதவன், வைகுந்தன் என கண்ணனை நாங்கள் விடாமல் போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். அது அவளின் காதுகளில் விழவில்லையா? எழுந்திரு பெண்ணே.
விளக்கம் :
உலக மக்கள் அனைவரும் உலக சுகங்கள், இன்பங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட முடியாமல், எதற்காக பிறவி எடுத்தோம் என்பதை உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களும் உணராமல் மற்றவர்கள், இறைவன் மீது பக்தி செய்வதன் அவசியத்தை எடுத்துச் சொன்னாலும் அதை உணர்ந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குள் மன மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் மாயையில் இருந்து விடுபடுவதற்காக தொடர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என விளக்குகிறார் ஆண்டாள்.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்