2024 லோக்சபா தேர்தல்: பாஜகவுக்கு 38 தேர்தல் மேலாண்மை குழுக்கள்.. அறிவித்தார் அண்ணாமலை

Feb 05, 2024,06:48 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை அறிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை .


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் மாத வாக்கில் தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்போதே இதற்காக கட்சிகள் தயாராக ஆரம்பித்து விட்டன. திமுக, அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


எல்லோருக்கும் முன்பாக தமிழ்நாட்டில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக தீவிரம் காட்டி வருகிறது.  இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது.  இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 தேர்தல் மேலாண்மை குழுக்களை  அண்ணாமலை அறிவித்துள்ளார்.




பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.  38 குழுக்களின் விவரம் வருமாறு:


தேர்தல் நிர்வாகக் குழு, தேர்தல் அலுவலகம், கால் சென்டர், அலுவலக மேலாண்மை, புரோட்டோகால்,  மீடியா துறை, மீடியா உறவு, சட்ட விவகாரம், தேர்தல் ஆணையம், இலக்கிய தயாரிப்பு, இலக்கிய உரை அச்சிடுதல், பப்ளிசிட்டி மெட்டீரியல், பப்ளிசிட்டி மெட்டீரியல் - இலக்கிய விநியோகம், வாகனம், சுற்றுப்பயணம்,  விளம்பர பிரச்சாரம் (டிவி, எப்எம் ரேடியோ, தியேட்டர் விளம்பரங்கள் கேபிள் நெட்வொர்க், டிஜிட்டல் ஸ்கிரீன், பிரின்ட் மீடியா)


வீடியோ வேன்கள், ரிசோர்ஸ், கணக்கு விவகாரம், புள்ளிவிவரம், ஆவணங்கள், தேர்தல் அறிக்கை, குற்றப்பத்திரிகை,  சோசியல் மீடியா -ஹைடெக் பிரசாரம், டிஜிட்டல் துறை, கலாச்சார பிரச்சாரம், தெரு கூட்டங்கள், கமர்ஷியல் -சோசியல், வெளிநாட்டு தொண்டர்கள், மகளிர் பிரச்சாரம், இளைஞர் பிரச்சாரம், எஸ்சி பிரச்சாரம், எஸ்டி பிரச்சாரம், ஜுக்கி ஜோப்டி பிரச்சாரம், சோசியல் சம்பார்க், லாபரதி சம்பார்க், பூத் பணி, பேசும் பொருட்கள், விஸ்தாரக் யோஜனா.


தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் எச். ராஜா இடம் பிடித்துள்ளார். மொத்தம் நான்கு பேர் கொண்ட இந்தக் குழுவில், எச். ராஜா, கே.பி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  பல்வேறு கட்சிகளும் ஓரிரு குழுக்களை அமைத்துள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக அதிரடியாக 38 குழுக்களை அமைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்