சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளாகவே மதுரை பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
மதுரை பந்தல்குடி கால்வாயை திரைச் சீலை கட்டி மூடிய செயல் மதுரையில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. திமுக மீதான விமர்சனத்தையும் இது கொண்டு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் திரைச்சீலைகளை மக்களே அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று அப்பகு வழியாக முதல்வரின் ரோட் ஷோ நடந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி கால்வாயைப் பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் துரித கதியில் கால்வாயைத் தூர் வாரவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார, பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், , நேற்று மதுரை பந்தல்குடி கால்வாய், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஆண்டு, மதுரையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை தூர்வாராமல் இருப்பதும் ஒரு காரணம். இதனையடுத்து, ₹90 கோடி செலவில், கால்வாயை தூர் வாரி, தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.
நான்கு ஆண்டுகள் கால்வாயை தூர்வார ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற? இந்த நாடகத்தால் யாருக்கு என்ன பயன்? மதுரை மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
கால்வாயை தூர்வார, அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த ₹90 கோடி திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்? என்று கேட்டுள்ளார்.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}