டெல்லி: கெளதம் கம்பீரைத் தொடர்ந்து, அவரது பாணியில் இன்னொரு பாஜக எம்.பியும் அரசியல் நடவடிக்கையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். சீட் கிடைக்காது என்ற தகவலால் இவர்கள் அரசியலை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது.
கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கம்பீர். தீவிர பாஜககாரராக செயல்பட்டு வந்தார். ஆனால் இவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு திருப்தி தரவில்லை. இவரால் கட்சிக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றும் பலரும் குமுறல் வெளியிட்டு வந்தனர். ஒரு எலைட் தலைவர் போலவே செயல்படுவதாகவும் அதிருப்தி இருந்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் கம்பீருக்கு மீண்டும் சீட் கிடைக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த கெளதம் கம்பீர், தன்னை அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவர் மீண்டும் கிரிக்கெட் பக்கமே போகவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தற்போது இன்னும் ஒரு பாஜக எம்.பியும் தன்னை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது பெயர் ஜெயந்த் சின்ஹா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி. ஆவார். இவர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னை நேரடி தேர்தல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைவர் நட்டாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை நான் கவனம் செலுத்த முடியும். இருப்பினும் கட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் தொடர்ந்து இணைந்திருப்பேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
இவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
இந்த முறை பாஜக பல்வேறு புதிய உத்திகளை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிக்கிறது. அதாவது ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை அது தேர்வு செய்துள்ளதாம். பல்வேறு ஃபீட்பேக் மூலம் இவர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் யாருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறதோ அவர்களுக்கே சீட் கொடுக்கப்படுகிறதாம். முக்கிய வேட்பாளர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருந்தால்தான் மீண்டும் சீட் கொடுக்கப்படுமாம். பெயர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது சர்ச்சை இருந்தாலோ அவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் இந்த முறை பல சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் கட்சியை விட்டோ, கட்சிப் பணிகளை விட்டோ யார் விலகினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை என்ற முடிவிலும் பாஜக மேலிடம் உள்ளதாம். கட்சிதான் முக்கியம், தனி நபர்கள் அல்ல என்பது கட்சித் தலைமையின் நிலைப்பாடாம்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}