கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று கோயம்பத்தூர் விமான நிலையம். தினசரி ஆயிரக்கணக்கானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இ மெயில் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. ஆனால் போலீஸாரின் சோதனையில் இது புரளி என்று தெரிய வந்தது.
இருப்பினும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதையடுத்து வதந்தி என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுவும் இ மெயில் மூலம் வந்துள்ளது. இதையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் விமான நிலையம் முழுமையாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையம் பரபரப்பானது. இருப்பினும் தற்போது இந்த மிரட்டலும் புரளி என்று தெரியவந்துள்ளது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}