இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பலுசிஸ்தானைச் சேர்ந்த எம்.பி. ஆவார்.
இதுகுறித்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் பிரதமர் சபாஸ் ஷெரீப்பும், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் அகமதுவும் இணைந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் இறுதியில் கக்கர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமராக இருப்பார் கக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி தாமதமாகும் என்பதால் தேர்தல் நடத்துவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கக்கர் பலுசிஸ்தான் அவாமி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 6 வருடமாக பாகிஸ்தான் மேல்சபை உறுப்பினராக கக்கர் இருந்து வருகிறார்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}