ரோஜா டூ பொன்னியின் செல்வன்.. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு.. 7வது முறையாக தேசிய விருது!

Aug 16, 2024,07:30 PM IST

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2022ம் ஆண்டிற்கான சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இது ஏ.ஆர்.ரஹ்மான் பெற போகும் 7வது தேசிய விருது ஆகும்.


மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே அவர் தேசிய விருது பெற்று அதிர விட்டார். இப்போது அதே மணிரத்தினம் - ஏ.ஆர்.ரஹ்மான் ஜோடி தனது மாஜிக்கை தேசிய விருதுகளில் நிகழ்த்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு மொத்தம் 4 விருதுகள் கிடைத்துள்ளது. இதில் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு துவங்கி, தற்போது வரை ஏ.ஆர்.ரஹ்மான் 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவற்றில் லகான் தவிர மற்ற அனைத்தும் தமிழ் படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.




இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை என்னும் அளவிற்கு சிகரம் தொட்ட தமிழராக சர்வதேச அளவில் வலம் வந்த கொண்டிருக்கிறார். இவர் தொடாத மேடைகள், வாங்காத விருதுகள் இல்லை என சொல்லும் அளவிற்கு, தடம் பதித்த இடத்தில் எல்லாம் வெற்றியை பதிய வைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 


மிக சாதாரணமாக வாழ்க்கையை துவக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்ப காலத்தில் டாக்குமென்ட்ரி, டிவி விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு இசையமைத்து வந்தார். 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தது. அதற்கு பிறகு பல விருதுகளை வென்றாலும் 2009 ம் ஆண்டு, ஸ்லம்டாக்மில்லினர் படத்திற்காக இவர் வாங்கிய ஆஸ்கார் விருதும், அந்த மேடையில், எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசிய இவரது உரையும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.


ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படமும் தேசிய விருதை பெற்றுள்ளது. இதனால் இவர்கள் கூட்டணி மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 


ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற தேசிய விருதுகள் :




1992 - ரோஜா

1996 - மின்சார கனவு

2001 - லகான் (இந்தி)

2002 - கன்னத்தில் முத்தமிட்டால்

2017 - காற்று வெளியிடை


2017ம் ஆண்டு சிறந்த பின்னணி இசைக்காக மாம் என்ற இந்தி படத்திற்காகவும் தேசிய விருதினை பெற்றுள்ளார். இது நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பின்னணி இசைக்காக பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேசிய விருதினை பெற்றுள்ளார். இதன் மூலம் தான் இன்னும் ஓயாத இசைப் புயல் என்பதை நிரூபித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.


இந்த வருடம் வெளியான ராயன் மற்றும் கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாஜிக் செய்துள்ளது. அதில் ஏதாவது ஒன்றுக்கு நிச்சயம் ரஹ்மான் தேசிய விருது பெறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்