காபி ஆனந்தம்தான்.. ஆனால் ஆரோக்கியமாக இருக்க?.. இதைப் படிங்க.. அப்புறம் குடிங்க!

Jul 18, 2023,12:39 PM IST
- மீனா

சென்னை: செம டயர்டா இருக்கா.. தலைவலிக்குதா.. போரடிக்குதா.. டல்லா இருக்குதா... சூடா ஒரு காபி குடிச்சா எல்லாமே போயே போச்!  பலருக்கும் காபி குடிப்பது மிக மிக சந்தோஷமான பிடித்தமான ஒன்று.

காபி டீ குடித்து ஆனந்தமாய் இருந்திருப்போம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதோ சூப்பரான வழி சொல்றோம்.. கேட்டுக்கங்க. காலையில் எழுந்தவுடன் நாம் எல்லாரும் விரும்பி குடிப்பது இந்த டீயும் காபியும் தான். அதிலும் சில பேருக்கு காபி குடித்தால் தான், அடுத்த வேலையைப் பற்றி சிந்தனையே வரும். 

அப்படிப்பட்டவர்கள் டீயோ  காபியை குடித்தால் தான் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்வார்கள். ஆனால் அது மனதைப் பொறுத்த விஷயம்.. உண்மையில் காபி, டீயை விட பெஸ்ட்டான பானங்கள் நிறையவே உள்ளன.



நாம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்காக ஒரு ஜூஸ் இருக்கு.. இந்த ஜூஸை ட்ரை பண்ணி பார்க்கலாமா.. அதுதான் ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ். இதை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டால் சூப்பர் எனர்ஜியாக நம்மை உணர முடியும். ஆரோக்கியமாக இருப்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதில் சேர்க்கப்படும் பழங்களில் நமக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உள்ளடக்கி உள்ளது. அதை நாம் உட்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் நமக்கு கிடைத்துவிடும். அதிலும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் உடல் வளர்ச்சிக்கும் ,மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுவதாக இந்த ட்ரை ஃப்ரூட் ஜூஸ் அமைந்துள்ளது .

இந்த ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. 

அதற்கு தேவையானது பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சை, வால்நட், மற்றும் பால். இவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, இது மூழ்கும் அளவுக்கு சிறிது தண்ணீர் ஊற்றி,  மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . இவை அனைத்தும் நன்கு ஊறிய பிறகு பாதாமின் தோலை மட்டும் நீக்கிவிட்டு இது அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி 300 மில்லி பால் சேர்த்து நன்கு அரைத்து  வடிகட்டாமல் அப்படியே ஒரு டம்ளரில் மாற்றி குடிக்கலாம். 

இவற்றில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம், நார் சத்துக்கள், புரதம் ஆன்ட்டிஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நம் எலும்பை, உறுதிப்படுத்தவும் இருதயத்தை பலப்படுத்தவும் , அஜீரணக் கோளாறுகளை சரி பண்ணவும் ,கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கவும் நம் உடலில் உள்ள  பலவீனமா அணுக்களை குறைத்து கேன்சர் போன்ற எந்த விதமான நோய்களும் வராமல் பாதுகாக்கிறது.

இவற்றை தொடர்ந்து குடித்து வந்தால் வெயிட் அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை. குறைந்த கலோரிகளே உள்ளதால் குறைவான அளவில் நாம் எடுத்துக் கொண்டாலும் நிறைவான சத்துக்கள் தான் நமக்கு கிடைக்கும். அதனால் ,ஆரோக்கியம் தான் அதிகரிக்குமே தவிர நம்முடைய எடை அதிகரிக்காது. 

ஜூஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
பாதாம் -10
முந்திரி -7
பிஸ்தா -10
உலர் திராட்சை -15
பேரிச்சை -5
வால்நட் -3

இந்த அளவுகள் எல்லாம் ஒரு நபருக்கு உரியது தான். அதிகமான நபர்களுக்கு தேவைப்படும்போது ட்ரை ஃப்ரூட்ஸ் அளவுகளையும் அதிகரித்துக் கொள்ளவும்.

என்ன ஜூஸ் போடக் கிளம்பிட்டீங்களா... என்ஜாய்!

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்