முத்தரசன் நடிக்க.. இளையராஜா இசையமைக்க.. இறுதிக் கட்டத்தை எட்டிய "அரிசி"!

Mar 13, 2024,04:01 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி”  திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது.


தமிழர்களின் முக்கிய  உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை இப்படம் விவரிக்கிறது. விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. மேற்கத்திய உணவுகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம்,  நம்மை அறியாமலேயே நமது பாரம்பரியத்தை எவ்வாறு அழிக்கிறது என்பதனை அழகாக சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். இன்றைய சமூகத்தின் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக, அழமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.




இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் அரிசி. மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார்  இயக்கத்தில் இப்படம் உருவாகுகிறது.இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 




இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்கிறார். நடனம் தினா மாஸ்டர், சண்டை பயிற்சி வீர் விஜய், சேது ரமேஷ் கலை இயக்கம் செய்துள்ளார், டிசைன்ஸ் அஞ்சலை முருகன், மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் பி.சண்முகம் தயாரிக்க, எஸ்.எம்.பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்கள்.


 


இன்றைய காலத்தில் அரிசிக்கும், அரசியலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது இப்படம். அரிசியை மையமாக வைத்து படம் உருவாகி இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 




இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படகுழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்