ART TO CONNECT 2.0.. டாக்டர் நிர்மலா கிருஷ்ணனின் கனவுத் திட்டம்.. அது என்ன ஆர்ட் டூ கனெக்ட் 2.O?

Jan 25, 2025,06:14 PM IST

சென்னை கலாஷேத்திராவில் கடந்த 2020ம் ஆண்டு ஒரு போட்டி நடந்தது. அதாவது சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கும், நார்மலான குழந்தைகளுக்கும் இடையிலான போட்டிதான் அது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிர் நின்று மோத மாட்டார்கள்.. மாறாக இணைந்து போட்டியிடுவார்கள். அந்தப் போட்டியில் நடனம், பாட்டு, ஓவியம், விளையாட்டு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றன.


பள்ளிச் சிறார்களுக்கு இடையிலான இந்தப் போட்டியின் நோக்கம் என்னவென்றால், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளும், இயல்பான குழந்தைகளின் திறமைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களும் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும். அவர்களும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டும். அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதே. ART TO CONNECT என்ற பெயரில் நடந்த அந்தப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இதை பெரிதாக வரவேற்றனர். அடுத்த போட்டி எப்போது என்ற கேள்வியும் கூடவே இருந்து வந்தது. அந்த கேள்விக்கு விடைதான் இந்த ART TO CONNECT 2.O.




நான்கு பிரிவுகளில் இந்தப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்புக் குழந்தைகளுடன், நார்மல் குழந்தைகளும் இந்தப் போட்டிகளில் இணைந்து பங்கேற்றார்கள். பள்ளிக் குழந்தைகள் மட்டும்தான் இதில் பங்கேற்றனர். நார்மலான குழந்தை, தனக்குத் தெரிந்த திறமையை, சிறப்புக் குழந்தைக்குக் கற்றுத் தந்து அந்தக் குழந்தைக்கு அதன் சந்தோஷத்தை பகிரும் வாய்ப்பை அளிக்க  முடியும் என்பதே அந்தப் போட்டியின் அழகு. இசை, பாடல், நடனம், ஓவியம் என இவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்.


சென்னை, மும்பை, டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா, கேரளா, மங்களூரு, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறும். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை சர்வதேச அளவிலும் மாணவர்களை பங்கேற்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் நிர்மலா கிருஷ்ணன் கூறுகிறார்.


நார்மல் பள்ளிகளைச் சேர்ந்த 2000 சிறார்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட 300 சிறார்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் இணைந்து தங்களது திறமைகளை மட்டும் வெளிக்காட்டப் போவதில்லை. மாறாக, தங்களது அன்பையும், ஆதரவையும், அங்கீகாரத்தையும், தட்டிக் கொடுத்தலையும், ஊக்குவித்தலையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். நார்மல் திறமை கொண்ட சிறார்கள், தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை, சிறப்புக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்துள்ளனர். இதயங்களை இணைக்கும் அழகான பயணமாக இது அமைந்துள்ளது.


இந்தப் போட்டியில் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் அது சுஹ்ரா மற்றும் அமீர் தான். தஜிகிஸ்தான் நாட்டின் ருஷோன் நகரைச் சேர்ந்தவர்கள் இந்த குழந்தைகள். இதில் சுஹ்ரா  டோஹிர் இயல்பான குழந்தை. நிக்கடமோவ் அமீர் பேச்சு வராத சிறப்புக் குழந்தை. இந்த இருவரும் இணைந்து ஆடிய டான்ஸ் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்து விட்டது.  இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த அந்த பெர்பார்மன்ஸ், அரவணைப்பு, அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை உலகுக்கே பறை சாற்றி விட்டது. கலையால் எதையும் சாதிக்க முடியும் என்ற ஸ்டிராங்கான மெசேஜ் அது.  அனைவருமே இவர்களின் நடனத்தைப் பார்த்து சிலிர்த்துப் போய் விட்டனர்.


ART TO CONNECT 2.0 இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 6  லட்சம் பேரைக் கவர்ந்துள்ளது. இதுகுறித்த உரையாடல்கள், விவாதங்கள் கிளம்பி விட்டன. ஸ்பெஷல் குழந்தைகளையும் எல்லாவற்றிலும் உள்ளடக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனையை இது தூண்டி விட்டுள்ளது. ஐ.நா. சபையின் Sustainable Development Goal 10 திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது. 


இந்த அற்புதமான போட்டியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான தூதர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருப்பது கரீஷ்மா கண்ணன். இவர் டவுன் சின்ட்ரோம் குறைபாட்டுடன் பிறந்தவர். மிகச் சிறந்த ஓவியங்களை வரைந்து அவற்றை விற்று அவற்றின் மூலமாக 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு நிதி திரட்டிக் கொடுத்த மிகப் பெரிய மனதுக்குச் சொந்தக்காரர். சிறப்புக் குழந்தைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.


கலையின் மூலமாக இதயங்களை இணைத்து, வாழ்க்கையை அழகாக்கும் ஆர்ட் டு கனெக்ட் போட்டி ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்கும் புது நம்பிக்கையைத் தரும் என்று நம்புவோம். எங்கெல்லாம் வாய்ப்புகள் அருகிப் போயுள்ளதோ அங்கெல்லாம் கலையின் மூலமாக வாய்ப்புகளை உருவாக்குவோம் என்பதே இதன் முக்கியமான செய்தி.


டாக்டர் நிர்மலா கிருஷ்ணன், ஆர்ட் டு கனெக்ட் திட்டத்தின் நிறுவனராக இருக்கிறார். இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய  www.linkthedots.online இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்