டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு, மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 8வது சம்மனுக்கு பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் கூட கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 8வது சம்மனுக்கு கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்புவது சட்டவிரோதமானது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றாலும் கூட நான் விசாரணைக்கு ஆஜராக தயாராகவே இருக்கிறேன். மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக நான் தயார் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் தவிர்த்து வருவதை எதிர்த்து டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}