இஸ்லாமாபாத் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானில் இன்று துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இதில் ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. அதேபோல பி குரூப்பில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை குரூப் பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும். இந்தியாவின் முதல் போட்டி செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரானதாகும். கண்டியில் இப்போட்டி நடைபெறவுள்ளது. 2வது போட்டி நேபாளத்துடன் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும்.
தொடக்கப் போட்டிகளைத் தொடர்ந்து சூப்பர் 4 ஸ்டேஜ் போட்டிகள் செப்டம்பர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும்.
இன்று துவங்கும் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. மாலை 3 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன.
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}