இலங்கையை வச்சு செய்த இந்தியா.. பிச்சு உதறிய சிராஜ்.. ஆசியா கோப்பை நம்தே!

Sep 17, 2023,04:26 PM IST
கொழும்பு: ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில்  10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 8வது ஆசியா கோப்பையாகும்.

இந்தியா - இலங்கை இடையே இன்று ஆசியா கோப்பை இறுதிப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை எடுத்தது.



இலங்கை அணிக்கு இன்று மோசமான நாளாக அமைந்து விட்டது. இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள், இலங்கையின் பேட்டிங்கை உடைத்து சிதைத்துப் பிரித்து மேய்ந்து விட்டார்கள். முதல் விக்கெட்டை பும்ரா வீழ்த்த அடுத்து வந்தார்  பாருங்கள் முகம்மது சிராஜ்.

முகம்மது சிராஜ் அனல் கக்க வீசிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிதறிப் போய் விட்டது இலங்கை அணியின் பேட்டிங் ஆர்டர். ஒரே ஓவரில் 4 விக்கெட்களைச் சாய்த்து அதிர வைத்து விட்டார் சிராஜ். 3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் சாய்த்த சிராஜை சமாளிக்க முடியாமல் திணறிப் போய் விட்டது இலங்கை அணி.  ஒரு நாள் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களைச் சாய்த்த முதல் வீரராக உருவெடுத்தார் முகம்மது சிராஜ்.



சிராஜ் பக்கம் ஒரு பக்கம் வெளுத்தெடுக்க மறுபக்கம் ஹர்டிக் பாண்ட்யா தன் பங்குக்கு  3 விக்கெட்களைச் சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். கடைசியில்  15.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் இந்தியா ஆடியது. 6.1 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இஷான் கிஷான் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களையும் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை எளிதாக்கினர்.

இது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 8வது ஆசியா கோப்பையாகும். ஆட்ட நாயகனாக  முகம்மது சிராஜ் தேர்வானார்.

சமீபத்திய செய்திகள்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

அதிகம் பார்க்கும் செய்திகள்