பாகிஸ்தான் ஜெயிக்கட்டும்.. அப்பதான் கரெக்டா இருக்கும்.. என்ன அதுல் வாசன் இப்படிச் சொல்லிட்டாரு

Feb 23, 2025,11:58 AM IST

மும்பை: சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் கூறியுள்ளார்.


இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் மோதினாலே அங்கு விளையாட்டு போய், வெறித்தனம் வந்து விடுகிறது. வெல்வதே முக்கியம், அதுவே லட்சம், வெல்லாவிட்டால் கெளரவம் போச்சு என்ற அளவுக்கு இரு நாட்டு ரசிகர்களும் நினைக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. 


ஆனால் இன்றைய போட்டியில் இந்தியாவை விட பாகிஸ்தான் ஜெயித்தால் நல்லாருக்கும் என்று கூறி இந்திய ரசிகர்களை ஜெர்க் அடிக்க வைத்துள்ளார் முன்னாள் வீரர் அதுல் வாசன். எல்லோரும் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று கூறி வந்தால் அதுல் என்ன இப்படி சொல்கிறார் என்று பலரும் ஆச்சரியப் பார்வை பார்க்கின்றனர்.




ஆனால் அதுல் வாசன் இதற்கு சூப்பரான காரணத்தைக் கூறியுள்ளார். இன்றைய போட்டி குறித்து அதுல் வாசன் கூறுகையில், பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வென்றால் வேடிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.  இந்தப் போட்டித் தொடர் சுவாரஸ்யமாக போக வேண்டும் என்ற நோக்கில் இதை நான் சொல்கிறேன். பாகிஸ்தான் இன்றைய போட்டியில் வென்றால், போட்டி கடுமையாகும், பாலன்ஸ்டாக மாறும், விறுவிறுப்பு நீடிக்கும். மொத்தத் தொடரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறி விடும் என்று கூறியுள்ளார் அதுல் வாசன்.


வாசன் இந்திய அணி குறித்து மேலும் கூறுகையில்,  இந்தியாவின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. அற்புதமான வீரர்கள் நிரம்பிய அணியாக இந்தியா உள்ளது. துபாயில் இந்திய அணி, மேற்கொண்டு வரும் ஸ்டிராாட்டஜி சரியானே. 


சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான வீரர்கள்.  எட்டாவது நிலை வரை நம்மிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அக்ஸார் படேல் அற்புதமாக விளையாடுகிறார். ஹோரித் 5 ஸ்பின்னர்களுடன் அற்புதமான வியூகத்தை வகுக்கிறார். நிச்சயம் இந்த அணி அற்புதம் செய்யும் என்று தாராளமாக நம்பலாம் என்றார் அவர்.


அதுல் சொல்வது போல நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்திய அணி சிறப்பான பார்மில் இருக்கிறதே.. அது எப்படி வேுண்டும் என்று தோற்க முடியும்.. எனவே இன்றைய போட்டியிலும் இந்தியாவே வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.


இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல், வாஷிங்டன் சு்நதர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.


பாகிஸ்தான் அணி: முகம்மது ரிஸ்வான், பாபர் ஆஸம், இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், செளத் ஷகீல், தயாப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ராப், முகம்மது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிதி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

news

Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!

news

தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்